“அலப்’பறை’ யில் மருத்துவர்களுக்கு மரியாதை; லண்டன் மருத்துவமனையில் அசத்தப் போகும் இசைக்குழு.

“அலப்’பறை’ யில் மருத்துவர்களுக்கு மரியாதை; லண்டன் மருத்துவமனையில் அசத்தப் போகும் இசைக்குழு.

நம் நாட்டில் பரவி வரும் கொரோனா வைரஸ்யை எதிர்த்து களத்தில் இருந்து நேரடியாக போராடிவரும் அனைவரும் இப்பொழுது மக்களின் மனதில் ஹீரோக்களாக மாறிவிட்டனர்.அதிலும் குறிப்பாக மருத்துவர்கள்.
அவர்களை ஊக்கப்படுத்தி கௌரவப்படுத்தும் வகையில் மதுரை அலப்பறை குழுவினர் ,இன்று இரவு லண்டன் கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் பறை இசை ஒலிக்க உள்ளன
மதுரை அலப்பறை அமைப்பு லண்டனில் பறை இசை குறித்து விழிப்புணர்வுகள் மற்றும் செயல்பாடுகளை நடத்தி வருகிறது.

மதுரை அலப்பரை என்ற பெயரில் பேஸ்புக் பக்கமும் இந்தக் குழுவுக்கு இருக்கிறது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்ட செய்திக்குறிப்பு, மக்களின் உயிரைக் காக்க தன் உயிரை பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கி போராடும் அனைத்து மருத்துவர்களும் ,செவிலியர்களும், மற்றும் அனைத்து சமூகப் பணியாளர்களையும், பாராட்டும் விதமாக 21 அன்று இரவு 8 மணிக்கு மதுரை அலப்பறை குழுவினர் தமிழர்களின் இசையான பறையிசையை பாராட்டு இசையாக இயக்கப்படும் என்று தெரிவித்து இருக்கிறார்கள்.

மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற தன்னலம் மறந்து பணியாற்றும் அனைத்து சமூக பணியாளர்களுக்கும் இந்த இசை சமர்ப்பணம் என்று தெரிவித்துள்ளது.

லண்டன் கிங் ஜார்ஜ் ஹாஸ்பிடல் என்ற மருத்துவமனையில் வைத்து அந்நாட்டு நேரப்படி இரவு 8 மணிக்கு இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இது வெள்ளிக்கிழமை அதிகாலை 12 .30 மணி ஆகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *