அஷ்டலட்சுமிகளின் அருள் பெறுவதற்கு மிக எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஒரு சின்னம் இருந்தால் போதும்… அது என்ன என்று தெரியுமா??

அஷ்டலட்சுமிகளின் அருள் பெறுவதற்கு மிக எளிமையாக கிடைக்கக்கூடிய இந்த ஒரு சின்னம் இருந்தால் போதும்… அது என்ன என்று தெரியுமா??

நாம் தினந்தோறும் எந்த ஒரு பொருளை திரும்பத் திரும்ப பார்க்கும் சூழல் ஏற்படுகிறது அந்த பொருளின் தாக்கம் நமக்குள் ஏற்படும் என்பது எல்லோராலும் அறியப்பட்ட ஒரு கருத்து  அந்த வரிசையில் மங்களகரமான பல பொருட்கள் நம் கையில் இருந்தாலும் ஸ்வஸ்திக் சின்னத்திற்கு முதல் இடம் உண்டு என்று சொன்னால் அது பொய்யாக வாய்ப்பில்லை

தினமும் காலையில் நீங்கள் எழுந்தவுடன் மட்டுமல்லாமல் நீங்கள் எந்தெந்த இடங்களுக்கு அதிகமாக சொல்கிறீர்களோ அந்த இடத்திலும் மற்றும் எந்த ஒரு பொருட்களை அல்லது இடத்தை அதிகமாக பார்க்கிறார்களோ அந்த இடத்தில் இந்த சின்னத்தை ஒட்டிக் வைத்துக் கொள்வது மிகவும் நல்லது.

உதாரணத்திற்காக:

உங்கள் கையில் உள்ள செல்போனை அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தால் அதில் ஏதேனும் ஒரு பகுதியில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது. இந்த காலகட்டங்களில் எல்லோரும் மிகவும் அதிகமாக பயன்படுத்த கூடிய ஒரு உபகரணம் தான் இந்த செல்போன்.

நமக்கு எப்போதும் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய ஒரு சின்ன தான் சுவஸ்திக் சின்னம் இந்த சின்னத்தை வீட்டில் வைத்தால் மிகவும் நல்லது என்று எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகும். இந்த ஸ்வஸ்திக் சின்னத்திற்கு முழுமையான அர்த்தம் என்ன என்பது பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.

இந்த ஸ்வஸ்திக் சின்னத்தை பற்றி சிறிது விரிவாக தெரிந்து கொள்ளலாம்

வீட்டில் இருக்கும் பெண்களாக இருந்தால் இந்த சின்னத்தை அவர்களது சமையலறையில் ஏதாவது ஒரு இடத்தில் ஒட்டி வைப்பது மிகவும் நல்லது. அல்லது பணிக்கு செல்லும் பெண்களாக இருந்தால் பணிபுரியும் இடத்தில் அவர்கள் அமர்ந்திருக்கும் ஏதேனும் ஒரு இடத்தில் இந்த சின்னத்தை ஒட்டி வைத்துக் கொள்வது மிகவும் நல்லது

அதே போல் ஆண்களும் அவர்களது பணிபுரியும் அலுவலகத்தில் அவர்கள் அமரும் ஏதேனும் ஒரு திசையில் இந்த சுவஸ்திக் சின்னத்தை ஒட்டி வைப்பது நல்லதாகும்

எல்லோரும் அவரவரது வாகனங்களில் இந்த சின்னத்தை  ஒட்டி வைத்துக்கொள்ளலாம்

இந்த  ஸ்வஸ்திக் சின்னமானது நமது வாழ்க்கையை தோல்வி இல்லாத வாழ்க்கையாக மாற்றும் என்பதும் வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களை தவிர்த்து நம் வாழ்க்கைக்கு இந்த சின்னம் மிகவும் உறுதுணையாக இருக்கும் என்பதும் நமது தோல்விகளை உடைத்து நமக்கு வெற்றிகளை தேடித்தரும் சின்னமாக இருக்கும் என்பதும் உண்மையான ஒன்று.

இதனால்தான் இந்த சின்னத்தை வியாபாரிகள் அவர்களது வியாபார இடங்களில் ஏதேனும் ஒரு பகுதியில் ஒட்டி வைத்திருப்பார்கள், அல்லது அவர்களது கம்ப்யூட்டர்  மீதும் ஒட்டி வைத்திருப்பார்கள்.

சில வீடுகளிலும் வாசல் கதவில் இந்த சின்னம் ஒட்டி இருப்பதை நாம் பார்த்திருப்போம் இதற்கு காரணம் வெற்றியை த  தரக்கூடிய சின்னத்தை அடிக்கடி பார்ப்பதர்க்குதான்.

இந்த சின்னத்தை அடிக்கடி பார்ப்பதன் மூலம் நமக்குள் ஏற்படும் நேர்மறை ஆற்றல் மிகவும் அதிகரிக்கும் என்பதால் தான்.

விநாயகரின் மிக முக்கியமான அம்சமாக கருதப்படும் இந்த சின்னம் விநாயகரின் வலது கையில் இருப்பது குறிப்பிடத்தக்க ஒன்று. செங்கோண வடிவைக் கொண்ட இந்த ஸ்வஸ்திக் சின்னம் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் போடப்படும் ஒரு சின்னம் ஆகும் . இந்தச் சன்னதியில் அடங்கியிருக்கும் எட்டு கோடுகளும் எட்டு திசைகளை குறைக்கின்றன. இந்த சின்னத்தின் நான்கு மூலைகளிலும் வைக்கப்படும் புள்ளியானது மனிதர்களின் ஆன்மாவை குறிப்பிடுகிறது. இந்த ஆன்மா எப்பொழுதுமே எட்டுத்திக்கிலும் உள்ள இறைவனை பிரார்த்தனை செய்துகொண்டு இருப்பதாக ஐதீகங்கள் சொல்லப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இந்த ஸ்வஸ்திக் சின்னத்தில் இருக்கும் நான்கு கோணங்களில் நான்கு தேவதையும், நான்கு திசைகளையும், நான்கு மூலைகளிலும், நான்கு யுகங்களையும், நான்கு பருவங்களையும், குறிப்பிடுவதாக ஐதீகங்கள் சொல்லப்பட்டுள்ளது.

குறிப்பாக தினமும் இரவு நேரங்களில் இந்த சின்னத்தை பார்ப்பது மிகவும் நல்லது என்று சொல்லப்படுகிறது . அதாவது நீங்கள் தூங்க செல்லும் ஒரு பத்து நிமிடங்களுக்கு முன்பு இந்த சின்னத்தை உற்றுப் பார்த்துக் கொள்வது நல்லது. ஸ்வஸ்திக் சின்னம் உங்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்க வேண்டும். குறிப்பாக இந்த சின்னம் சிவப்பு மற்றும் ஆரஞ்சு வண்ணங்களில் இருந்தால் நல்லது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

நீங்கள் தூங்குவதற்கு கண்களை மூடும் முன்பு நீங்கள் பார்த்த இந்த சுவஸ்திக் சின்னம் உங்கள் கண்முன்னே நிற்கும் அளவிற்கு மனதில் பதிய வைத்துக்கொள்ள வேண்டும். அந்த நேரத்தில் உங்களுக்கு வெற்றிகள் நடப்பதைப் போலவும் உங்களது கஷ்டங்கள் நீங்குவது போலவும் நினைத்துக் கொள்ள வேண்டும்.

அப்படி செய்து வருகையில் உங்கள் காரியம் ஆனது வெற்றியில் தான் முடியும் மிக முக்கியமாக எப்பொழுதும் ஒரு காரியத்தை செய்யும் முன்பு வெற்றி உங்கள் அருகில் தான் உள்ளது என்பதை உணர்த்தும் அளவிற்கு இந்தச் சின்னம் உங்கள் மனதில் ஆழமாக பதிந்து இருக்க வேண்டும். தினமும் இவ்வாறு செய்து வருகையில் உங்கள் வாழ்வில் வெற்றியை தாண்டி வேறு எதுவும் குறிப்பிடாது என்பதை கருத்தில் கொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *