இதுல கூடாவ!..’சோதனையில் அதிர்ந்து போன காவல்துறை’!..கான்கிரீட் கலவை இயந்திரம் பயணித்த 18 பேர்!..

இதுல கூடாவ!..’சோதனையில் அதிர்ந்து போன காவல்துறை’!..கான்கிரீட் கலவை இயந்திரம் பயணித்த 18 பேர்!..

மத்திய பிரதேசத்தில் சிமெண்ட் கலவை லாரியில் பயணித்த 18 புலம்பெயர்ந்த தொழிலாளர்களை போலீசார் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்

கொரோனா காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அனைத்து மாநிலங்களுக்கும் இடையே போக்குவரத்து தடை செய்யப்பட்டு,அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டிருந்தது.

இதனால் காய்கறி,பால்,ஏற்றி செல்லும் வாகனங்களில் வேறு மாநிலங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள்
படிக்கும் மாணவர்கள் உள்ளிட்டோர் பயணித்து வருகின்றனர் சட்டப்படி இது குற்றம் என்றாலும்
போக்குவரத்து வசதி வேறு இல்லை என்பதாலும்,மனிதாபிமான அடிப்படையிலும்,சில வாகன ஓட்டிகள பயணிப்பவர்களுக்கு உதவி செய்கின்றனர் இந்நிலையில் மத்தியபிரதேச போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சிமெண்ட் கலவை லாரி ஒன்றில் லாரிக்கு பின்னால் இருக்கும் பெரிய கலவை இயந்திரத்திற்குள் 18 பேர் மறைந்து பயணம் செய்து வந்துள்ளதும், இதற்கு வாகன ஓட்டுனரும் உடந்தை என்பதும்
தெரிய வந்ததை அடுத்து போலீசார் அதிர்ந்தனர்!.

இதுபற்றி கூறிய காவல்துறையினர் வாகன சோதனையின்போது சிமெண்ட் கலவை இயந்திரத்திற்குள் மறைந்து பயணித்த,இந்த 18 பேர் உத்திரப்பிரதேசத்தின் லக்னோவை சேர்ந்தவர்கள் என்றும்,இவர்கள் மகாராஷ்டிராவில் இருந்து லக்னோவிற்கு சென்று கொண்டிருந்தபோது பிடிபட்டுள்ளதாகவும்,அவர்கள்மீது தக்க நடவடிக்கை எடுத்து வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *