இப்படி ஒரு சோதனையா’!..இந்த நாட்டுக்கு..4 கிமீ ஒருவேளை சாப்பாட்டுக்காக வெயிலில் காத்திருந்த மக்கள்…’கலங்க வைத்த ட்ரோன் வீடியோ..!

இப்படி ஒரு சோதனையா’!..இந்த நாட்டுக்கு..4 கிமீ ஒருவேளை சாப்பாட்டுக்காக வெயிலில் காத்திருந்த மக்கள்…’கலங்க வைத்த ட்ரோன் வீடியோ..!

கொரோனா ஊரடங்கால் உணவிற்காக மக்கள் 4 கிமீ வரிசையில் காத்திருந்த வீடியோ வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்
பெரும் பீதியை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் மூடப்பட்டு உள்ளது.மக்கள் வேலையையும் வருமானத்தையும் இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் தென் ஆப்பிரிக்கா நாட்டிலும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது அந்த நாட்டினல் இதுவரை 5,951 பேருக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 116 பேர் வைரஸ் தாக்குதலுக்கு பலியாகியுள்ளனர்.


இதனால் கடந்த மார்ச் 27ம் தேதி முதல் அந்நாட்டில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பலரும் வேலை இழந்து உணவு கிடைக்காமல் தவித்து வருகிறார்கள். அந்நாட்டின் சென்சூரியன் பகுதியில் ஊரடங்கால் உணவின்றி தவித்து வரும் மக்களுக்கு அரசும் சில தனியார் அமைப்புகளும் சேர்ந்து உணவு வழங்க ஏற்பாடு செய்திருந்தனர்.இந்த தகவலை அறிந்த மக்கள் உணவு பொட்டலங்களை வாங்க குவிந்தனர் கூட்டம்
அலைமோதியதால் மக்கள் அனைவரும் வரிசையாக நிற்க வைக்கப்பட்டனர். சுமார் 2.5 மைல் (4கிமீ) ஒருவேளை உணவுக்காக கடும் வெயிலில் மக்கள் காத்திருந்த அந்தக்காட்சி,அங்கு பரந்த ட்ரோன் கேமரா மூலம் வீடியோ எடுக்கப்பட்டுள்ளது.
இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *