என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் : சொல்கிறார் பொன்மகள் வந்தாள் ஜோதிகா.

என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம் :
சொல்கிறார் பொன்மகள் வந்தாள் ஜோதிகா.

சென்னை :பொன்மகள் வந்தாள் படம் தனது மனதுக்கு நெருக்கமான படம் என்று நடிகை ஜோதிகா தெரிவித்துள்ளார்.

அறிமுக இயக்குனரான ஜே.ஜே .பிரட்ரிக் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள படம் பொன்மகள் வந்தாள் .இந்தப் படத்தில் பாக்யராஜ் ,பார்த்திபன், பாண்டியராஜன், தியாகராஜன் ,பிரதாப்போத்தன், என பிரபல முன்னணி நடிகர்கள் நடித்துள்ளனர்.

இந்தப்படத்தை சூர்யாவின் 2 டி என்டர்டெயின்மென்ட் தயாரித்துள்ளது .இந்தப்படம் மார்ச் இறுதியில் திரைக்கு வருவதாக இருந்தது .கொரோனா ஊரடங்கு காரணமாக இந்தப்படம் ரிலீஸ் ஆகவில்லை ஊரடங்கு முடிந்து தியேட்டர்கள் திறக்க இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அமேசான் பிரைமில் இந்தப் படம்
வெளியாகிறது .ஓ.டி .டி .யில் இந்த படத்தை வெளியிட தியேட்டர் அதிபர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே வரும் 29ஆம் தேதி
பொன்மகள் வந்தாள் படம் ரிலீஸ் ஆகும். நேற்று நடிகை ஜோதிகா செய்தியாளர்களிடம் பேசினார் அப்பொழுது இந்தப் படம் பற்றி அவர் கூறியதாவது .
இந்தப் படத்தில் நான் வழக்கறிஞராக நடித்திருக்கிறேன்.
ஊட்டி நீதிமன்றத்தில் நடக்கும் கதை சமூகத்தை பாதித்த ஒரு விஷயத்தை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறோம் அது என்ன என்பதை இப்போது சொல்ல இயலாது .
என்னை சுற்றி நடக்கும் விஷயங்களை கொண்ட கதைகளையே நடிப்பதற்கு நான் தேர்வு செய்கிறேன் .அதனால் தான் ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நான் நடிக்கிறேன். மக்களிடம் அதிக பாதிப்பை ஏற்படுத்துவது சினிமா அதனால் தான் பொறுப்புணர்வோடு நல்ல கதைகளை தேர்ந்தெடுப்பதிலும் அதில் நடிப்பதிலும் நான் விரும்புகிறேன். பொன்மகள் வந்தாள் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான விஷயத்தை பேசும் படம்

பெண்களை கண்ணியமான முறையிலும்
வலிமையானவர்களாக,சித்தரிக்கும் படங்களில் நடிக்க ஆசைப்படுகிறேன்
80 சதவிகித படங்கள் நிஜ வாழ்க்கையில் பெண்கள் எப்படி இருக்கிறார்கள்
என்பதை காட்டவில்லை .
நான் இரண்டு குழந்தைகளின் தாய் என்பதால் எனக்கு சமூகப் பொறுப்பு இருக்கிறது .
இந்தப் படத்துக்கு நானே டப்பிங் பேசியிருக்கிறேன் வழக்கமாக நான் நடிக்கும் படங்களின் ஸ்கிரிப்ட்டை இயக்குனர்களிடம் இரண்டு மாதங்களுக்கு முன்பே கேட்டு வாங்கி விடுவேன் .நீதிமன்றத்தில் வாதாடும் காட்சி இருப்பதால் நீண்ட நீண்ட வசனங்கள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன. இதற்காக அதிக ஹோம்வொர்க் செய்து உள்ளேன் .நான் நடிக்கும் வித்தியாசமான படங்களுக்கு அமேசான் சிறப்பான தலம் என நினைக்கிறேன் .
இப்பொழுது எனக்கு 41 வயது .இந்த வயதில் நான் ஹீரோவாக உணர்கிறேன் என்றும்.பயோபிக் கதைகளில் நடிக்க தனக்கு ஆர்வம் இல்லை என்றும் ஜோதிகா கூறியுள்ளார் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *