கசிந்த தகவலால் ஐபிஎல் அணிகள் குஷி- ஐபிஎல் நடத்த ரகசிய திட்டம்

கசிந்த தகவலால் ஐபிஎல் அணிகள் குஷி- ஐபிஎல் நடத்த ரகசிய திட்டம்

கொரோனா வைரஸ் காரணமாக தள்ளி வைக்கப்பட்டு இருந்த ஐபிஎல் தொடரை நடத்த பிசிசிஐ ரகசியமாக தயாராகி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன. ௧ொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 29 அன்று துவங்க வேண்டிய ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15 வரை தள்ளிவைக்கப்பட்டது .பின் கொரோனா வைரஸ் தொடர்ந்து அதிகரித்த நிலையில் ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டது.அதனால் ஐபிஎல் தொடர் தேதி அறிவிக்கப்படாமல் தள்ளிவைக்கப்பட்டது .
இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு பல்வேறு தொழில்களும் மீண்டும் தொடங்கும் வகையில் தளர்வு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டு வருகிறது.


அதனால் ஒரு நம்பிக்கையில் இருக்கும் பிசிசிஐ அடுத்து வரும் மாதங்களில் ஊரடங்கு தளர்வுகள் குறைந்து போக்குவரத்து அதிகரித்தால் ஐபிஎல் தொடரை நடத்தி விடலாம் என்ற நம்பிக்கையில் உள்ளதாக கூறப்படுகிறது.

ஐபிஎல் நடத்த தேதிகளும் குறிப்பிட்டு வைத்துள்ளதாகவும் அந்த தகவல் ஐபிஎல் அணிகளுக்கும் கூறப்பட்டு விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது .அதனால் ஐபிஎல் அணிகள் குஷியில் வேலைகளை துவங்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன .
ஐபிஎல் அதிகாரி ஒருவர் கூறுகையில் தேதிகள் பிசிசிஐ உறுதியாக முடிவு செய்துவிட்டதாகவும் எனினும் போக்குவரத்து பற்றி மட்டுமே குழப்பம் இருப்பதாகவும் கூறியுள்ளார் வெளிநாட்டிலிருந்து வீரர்களை இந்தியா
வரவழைப்பது தான் அடுத்த முக்கியமான வேலை என்றும் கூறியிருக்கிறார் .
ஐபிஎல் நடத்த அரசின் அனுமதியும் வேண்டும் ரசிகர்கள் முன்னிலையில் முன்னிலையில் போட்டிகள் நடத்த முடியாது. அதேசமயம் அந்த காலகட்டத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைய வேண்டும் இத்தனையும் நடந்தால்தான் ஐபிஎல் நடக்க முடியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *