காதலர் தின படத்தால் பிரபலமான குணாலின் மனைவி,பிள்ளைகள், யார் தெரியுமா ?

காதலர் தின படத்தால் பிரபலமான குணாலின் மனைவி,பிள்ளைகள், யார் தெரியுமா ?

1999 ஆம் ஆண்டு கதிர் இயக்கத்தில்
வெளியான காதலர் தினம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் குணால் .இவர் ஹரியானாவை சேர்ந்தவர் .
முதலில் ஹிந்தி பட வாய்ப்புகளை
தேடி சென்றார். ஆனால் அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை .அதனால் தமிழிலேயே குணால் படங்கள் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடித்த காதலர் தினம் படம் நல்ல வெற்றியை கண்டது .இளம் காதலர்கள் இடையே இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது.


இவருடைய இயல்பான நடிப்பால் தமிழ் ரசிகர்கள் இவரை ஏற்றுக்கொண்டனர் .அதனால் அடுத்தடுத்து தொடர்ந்து தமிழ் படங்களில் நடித்து வந்தார். ஆனால் அவருக்கு திருமணமான பின்பு அவருடைய வாழ்க்கையே வேறு திசையை நோக்கி சென்றது. அவரது வாழ்க்கையில் பல மாற்றங்கள் ஏற்பட்டது .திருமணமான பின்பும் லாவினா பாட்டியா என்ற பெண்ணை காதலித்து அவருடனேயே தனியாக வாழ்ந்து வந்தார் .

அதன்பின் என்ன ஆயிற்று என்பது யாருக்கும் தெரியவில்லை .திடீரென்று அவர் வாழ்க்கையில் ஒரு பெரிய சோகம் ஏற்பட்டது. 2007 அன்று மும்பையில் உள்ள அவரது அப்பார்ட்மெண்ட் வீட்டில் குணால் தூக்கிட்டு இறந்துள்ளார். இதற்கு அவரது காதலியான லாவினா பாட்டியாவை
விசாரணை செய்ய போலீசார் கைது செய்தனர் .தற்போது லாவினாவை விடுவித்து உள்ளார்.
இந்நிலையில் குணால் மனைவி மற்றும் குழந்தைகள் தற்போது மும்பையில் உள்ள அவரது தந்தையின் வீட்டில் வசித்து வருகின்றனர்.
தமிழில் ஒரு நல்ல முன்னணி ஹீரோவாக வலம் வர வேண்டிய குணால் அவர்கள் இப்படி செய்தது .அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *