கேட்பாரற்று கிடந்த ஏழரைக் கோடி ரூபாய் போலீசிடம் ஒப்படைப்பு தம்பதிக்கு குவியும் பாராட்டு.
கேட்பாரற்று கிடந்த ஏழரைக் கோடி ரூபாய் போலீசிடம் ஒப்படைப்பு தம்பதிக்கு குவியும் பாராட்டு.
கொரோனா வைரஸால் உலகமெங்கும் பல நாடுகளில் ஊரடங்கு பிறப்பித்ததால்.மக்கள் வெளியில் செல்லாமல் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். இப்பொழுது ஊரடங்கில் சில தளர்வுகள் கொண்டு வந்த நிலையில்.
ஒரு தம்பதியினர் வெளியே சென்றபோது சாலையில் கேட்பாரற்று கிடந்த ஏழரைக் கோடி ரூபாய் பணத்தை காவல்நிலையத்தில் ஒப்படைத்தனர் இவர்களின் நேர்மைக்கு தற்போது பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அமெரிக்காவின் வெர்ஜீனியா மாகாணம் கரோலின் நகரை சேர்ந்த டேவிட் -எமிலி சாண்டஸ் என்ற தம்பதியினர் காரில் நெடுந்தூர பயணம் மேற்கொண்டனர் செல்லும் வழியில் சாலையின் நடுவே இரண்டு பைகள் கேட்பாரற்று கிடந்ததைப் பார்த்த அவர்கள் பைகளை அப்புறப்படுத்தி விட்டு பயணத்தை தொடர எண்ணி பையின் அருகே சென்று போது உள்ளே கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர்கள் இருப்பதை பார்த்தனர் .
அதனை தொடர்ந்து காவல் துறையை வரவழைத்து அவர்களிடம் அந்தப் பணத்தை அப்படியே ஒப்படைத்தனர் .அவற்றை எண்ணிப் பார்த்தபோது ஒரு மில்லியன் டாலர்( இந்திய மதிப்பில் சுமார் 7 கோடியே 56 லட்சத்து 95 ஆயிரம் )இருந்தது. இந்தப் பணம் யாருக்கு சொந்தமானது என்றும். எப்படி இவ்வளவு பணம் சாலையின் நடுவே வந்தது என்றும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .
இதைத் தொடர்ந்து டேவிட்- எமிலி சாண்டஸ்
தம்பதியின் நேர்மையை குறித்து பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றனர்.