கொரோனா ஊரடங்கு காரணமாக 55 நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் முடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.

கொரோனா காரணமாக புதுச்சேரியில் முடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையில் புதுச்சேரி அரசு இறங்கியுள்ளது

கொரோனா ஊரடங்கு காரணமாக 55 நாட்களுக்கு மேலாக புதுச்சேரியில் முடங்கியுள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்.
பீகார் மற்றும் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 1200 பேர் சிறப்பு ரயில் மூலம் இரண்டு தினங்களுக்கு முன்பு புதுச்சேரியிலிருந்து அனுப்பப்பட்டனர். அதேபோல புதுச்சேரியிலிருந்து நாகாலாந்திற்கு 32 தொழிலாளர்கள் இன்று அனுப்பப்பட்டனர் .புதுச்சேரியில் உள்ள உணவாகங்களில் பணியாற்றியவர்கள் 55 நாட்களாக புதுச்சேரியில் முடங்கி இருந்தனர் உரிய மருத்துவ பரிசோதனைக்கு பிறகு இவர்கள் மாநில அரசு போக்குவரத்து கழக வாகனம் மூலம் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்டனர். அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பப்படுகிறார்கள்.

வெளி மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவர்களின் ஊர்களுக்கு அனுப்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு ஏற்படுத்தி வருவதாக சுற்றுலாத்துறை இயக்குனர் முனுசாமி அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *