கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகை உணவு பட்டியல்- சென்னை மாநகராட்சி வெளியீடு

கொரோனா சிகிச்சை பெறுபவர்களுக்கு வழங்கப்படும் இரண்டு வகை உணவு பட்டியல்- சென்னை மாநகராட்சி வெளியீடு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தினமும் வழங்கப்படும் உணவுகள் குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள பட்டியலில், ரமலான் மாதம் கடைபிடிக்கபடுவதால் இரண்டு விதமான உணவு பட்டியல் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அதன்படி வைரஸ் பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டு உள்ள நோயாளிகளுக்கு காலை 7 மணிக்கு காபி மற்றும் பிஸ்கட் வழங்கப்படும் காலை 8.30 மணிக்கு இட்லி,சாம்பாரும், காலை 10 மணிக்கு கபசுரக் குடிநீர் அளிக்கப்படும். தொடர்ந்து 11 மணிக்கு ஆவியில் வேகவைத்த சுண்டல்,நிலக்கடலை மற்றும் எலுமிச்சைச்சாறு வழங்கப்படும் எனவும். மதியம் 1 மணிக்கு சாம்பார்,ரசம், முட்டையுடன்,சாதம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து மாலை 4 மணிக்கு காபி பிஸ்கட் மற்றும் இரவு 7.30 மணிக்கு வாழைப்பழம் வழங்கப்படும் எனவும் அதேபோல் இரவு 8 மணிக்கு சாம்பார், ரசம், பொரியல் உடன் சாதம் கொடுக்கப்படும் என்றும், இரவு 10மணிக்கு சிறிதளவு பூண்டு சேர்த்து பால் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரமலான் நோன்பு கடைப்பிடிப்பவர்களுக்கு காலை 4 மணிக்கு ரொட்டி மற்றும் பிஸ்கட் வழங்கப்பட்டு காலை 4.30 மணிக்கு கபசுரக் குடிநீர் வழங்கப்படும்.பின்னர் நோன்பு முடிந்தவுடன் மாலை 7 மணிக்கு பால் மற்றும் வாழைப்பழமும் இரவு 9.30 மணிக்கு சாப்பாடும் 10 மணிக்கு பூண்டு சேர்த்த பாலும் வழங்கப்படுகிறது.

பெரியவர்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை 60 மில்லி கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என்றும் சிறியவர்களுக்கு 30 மில்லி வழங்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *