சமையல் எண்ணெய் ஜூன் 1-ந் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது .

தமிழக அரசின் அதிரடி உத்தரவு- 
சமையல் எண்ணெய் ஜூன் 1-ந் தேதி முதல் சில்லறையாக வாங்க முடியாது .

சென்னை: சமையல் எண்ணெய் ஜூன் 1-ந் தேதி முதல் பாக்கெட்டுகளில் மட்டுமே விற்க வேண்டும் என்றும் சில்லறையாக விற்கக் கூடாது எனவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக சமையல் எண்ணெயில் கலப்படம் தொடர்பான புகார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு குவிந்ததால் .இந்த அதிரடி நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துள்ளது .
தற்பொழுது நகரங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள எண்ணெய் கடைகள்,மளிகை கடைகளில் ,சமையல் எண்ணெய் சில்லறையாக விற்க்கப்படுகின்றன. 1லிட்டர் எண்ணெயாக வாங்க முடியாது
முடியாத மக்கள் .அவரவர் வசதிக்கேற்ப பாத்திரங்களில் என்னையை சில்லறையாக 100,200,300 மில்லி
என வாங்கி வருகின்றனர் .

இப்பொழுது இந்த நடைமுறை ஜூன் 1-ந் தேதி ஒரு முடிவுக்கு வருகிறது .எண்ணெய் சில்லறையில் விற்பனை செய்வதால் அதில் கலப்பட ஏற்பட வாய்ப்புள்ளதாக உணவு பாதுகாப்பு துறை கருதுகிறது. இதற்கு எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் .

தமிழக அரசு உத்தரவுபடி இனி சமையல் எண்ணெய் வகைகளை பாக்கெட்டுகளில் அடைத்து மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் இதன் மூலம் கலப்படம் மற்றும் போலி தயாரிப்புகளை ஒழித்து இதனால் ஏற்படும் பாதிப்பில் இருந்து மக்களை காக்க முடியும் என்பது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் நம்பிக்கையா௧ உள்ளது.

ஆனால் இந்த நடவடிக்கை
ஏழை மக்களையும்,மளிகை கடைக்காரர்கள் சிறிய எண்ணை கடைக்காரர்களை
பாதிக்கும் .இப்பொழுது பல இடங்களில் நமது பழைய முறைப்படி செக்கு எண்ணெய்கள் பிரபலமாகி வருகின்றன மக்களும் செக்கில் தயாரிக்கப்படும் எண்ணெயை விரும்பி வாங்க ஆரம்பித்துள்ளனர் .ஆனால் இப்பொழுது கடைபிடிக்கப்படும் இந்த ஆணையால் அந்த முறை முற்றிலுமாக அழிக்கப்படும் என்று எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதே போல் பேக்கேஜிங் உரிமம் அனைத்து வணிகர்களாலும் வாங்க முடியாது எனவும் எண்ணெய் விற்பனையாளர்கள் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது
ஆனால் தமிழக அரசு மக்களின் நலன் கருதியே இந்த முடிவை எடுத்துள்ளதாகவும் இனி 250 மி.லி 500 மி.லி என்ற அளவில் கூட பேஙக் செய்து மக்கள் வாங்குவதற்கு வசதியாக விற்பனை செய்ய எண்ணெய் உற்பத்தியாளர்கள் முன்வரவேண்டும் என உணவு பாதுகாப்பு துறையும கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *