சுத்தமான சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை, வெட்டுக்கிளி கிரேவி

சுத்தமான சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை, வெட்டுக்கிளி கிரேவி.

இப்போது நம்நாட்டில் வெட்டுக்கிளிகள் தான் அடுத்த பிரச்சனையாக இருக்கும் இந்த வேளையில் வெட்டுக்கிளிகளை பிடித்து அதை சமைத்து ருசியாக உணவு அளிக்கின்றனர் ராஜஸ்தான் மக்கள்.

நமது மாநிலங்களில் எப்படி வெட்டுக்கிளிகளின் தாக்குதலை சமாளிக்க முடியும் என்று அரசு பல யோசனைகளை வகுத்து வரும் இந்த சூழலில், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள உணவகங்களில் இந்த
வெட்டுக்கிளிகளை பிடித்து அதை சுத்தம் செய்து பிரியாணி, கிரேவி, ஃப்ரை என விதவிதமாக உணவு வகைகளை சமைத்து விற்பனை செய்து கொண்டு வருகின்றனர்.

இந்த வெட்டுக்கிளிகளை எப்படி முறையாக சமைப்பது என்பதைப் பற்றி தனியார் உணவகம் ஒன்றின் உரிமையாளர் பத்திரிக்கை காரர்களுக்கு பேட்டியும் அளித்துள்ளார்.

அவர் இந்த சமையல் முறையைப் பற்றிக் கூறுகையில்,  வெட்டுக்கிளிகளை சமைப்பதற்கு முன் அதை நன்றாக  சுத்தம் செய்ய வேண்டும், முக்கியமாக அதன் கால்கள், இறக்கைகளை நீக்க வேண்டும் என்கிறார்.

இந்த வெட்டுக்கிளிகள் விவசாய பயிர்களுக்கு மிகப்பெரிய சவாலாகவும் வருங்காலத்தில் நாட்டின் உணவு பஞ்சத்தை மிகவும் அதிகமாக ஏற்படுத்திவிடும்
என்றும் ஐநா எச்சரிக்கை விடுத்திருந்தது என்பதையும் இந்த நேரத்தில் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்தான் மக்கள் இந்த உணவைப் பற்றிக் கூறுகையில்,  வெட்டுக்கிளி உணவு வகைகள் மிகவும் ருசியாக இருப்பதாகவும், அதுமட்டுமில்லாமல் இந்த வெட்டுக்கிளிகள் அதிக அளவு புரதச் சத்து உள்ளதாகவும்
இதனால் அவர்கள் இந்த உணவை விரும்பி சாப்பிடுவதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *