‘சென்னையில் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு காரணம் என்ன?அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய விளக்கம்…!

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு அதிகம் இருப்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழகத்தில் நேற்று ஒரு நாள் மட்டும் 203 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அதில் 176 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிலையில் நேற்று செய்தியாளர்களின் சந்திப்பின்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம்,
சென்னையில் மட்டும் ஏன் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள்,’இந்தியாவிலேயே தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கான சோதனைகள் அதிகம் நடத்தப்படுகிறது.
சென்னையில் பாதிப்புகள் அதிகம் என கேள்வி எழுப்பப்படுகிறது.


சென்னையில் இன்று மட்டும் (01.05.2020) 3200 மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன இங்கு அதிகமான பரிசோதனைகள்
செய்யப்படுகின்றது.
தமிழகத்தில் நாம் சிறப்பான முறையில் கொரோனா தடுப்புப் பணிகளை செய்து வருகிறோம்,பத்திரிக்கை நண்பர் ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது
அந்தப் பத்திரிகை அலுவலகத்தில் இருக்கும் அனைவருக்கும் பரிசோதனை செய்ததில்,ஒரே அலுவலகத்தில் 30 பேருக்கு பாசிட்டிவ் இருப்பது கண்டறியப்பட்டு,அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவர்கள் அனைவரும் நலமுடன் இருக்கிறார்கள்.

அவர்களில் இருந்து வேறு யாருக்கும் தொற்று பரவாமல் இருக்க,அவர்களின் தொடர்பில் இருந்தவர்களுக்கும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் கொரோனா பரிசோதனை மையங்கள் அதிகமாக உள்ளது,தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான டெஸ்ட்களை எடுத்துள்ளோம்,நாம் மற்ற மாநிலங்களை காட்டிலும் அதிகப்படியான சோதனைகளை மேற்கொள்கிறோம்.

தமிழக முதலமைச்சர் சுகாதார பணியாளர்களுடன் இது குறித்து பேசி வருகிறார்.கர்ப்பிணி பெண்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் முதல்வரின் அறிவுரையின்படி செய்து வருகிறோம் என அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *