செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம் இருப்பதால் அதன் பலன்கள் என்ன தெரியுமா?

செவ்வாய் கிழமையில் முருகனுக்கு விரதம்
இருப்பதால் அதன் பலன்கள் என்ன தெரியுமா?

முருகா என்றால் அனைத்து துன்பங்களும் மறைந்து விடும் என்பார்கள்.அப்படிப்பட்ட முருகப் பெருமானை நினைத்து செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருப்பதால் வருவாய் அதிகரிக்கும், செல்வநிலை உயரும் ,குடும்ப அமைதி ,மன நிம்மதி ,தம்பதிகளிடையே அந்நியோன்யம், திருமணத்தடை ,வேலைவாய்ப்பில் உள்ள தடை, இவை அனைத்தும் நீங்கி நற்பலன்கள் தேடி வரும்.

ஒருவரின் செல்வ நிலை உயர காரணமானவர் அங்காரகன் என்று அழைக்கப்படும் செவ்வாய் பகவான். இந்த செவ்வாய் பகவானுக்குரிய கடவுள்தான் நம் தமிழ் கடவுள் முருகப் பெருமான் மற்றும் சக்திதேவி. அதனால்தான் செவ்வாய்க்கிழமை முருகனுக்கும் ,தேவி அம்பிகைக்கும் உகந்த நாளாக பக்தர்களால் வணங்கப்படுகிறது .


எப்படி விரதம் இருக்க வேண்டும்

செவ்வாய்க்கிழமை அதிகாலை குளித்து நெற்றியில் திருநீறுயிட்டு. முருகனுக்கு பிடித்த சிவப்பு நிற ஆடையை அணிந்து. முருகனின் அண்ணனும் முதன் முதற் கடவுளான விநாயகரை வேண்டி இந்த விரதத்தை துவக்க வேண்டும்.

முருகனின் படம் வள்ளி தெய்வானையுடன் இருப்பது நல்லது படத்திற்கு செந்நிற மலர்கள் சார்த்தி. நெய் தீபம் ஏற்றி செந்நிறக் கணிகளை பிரசாதமாக படைக்க வேண்டும் .விரதம் இருக்கும் பொழுது முருகனுடைய துதிகள் ஆன கந்த சஷ்டி கவசம் போன்ற பாடல்களை பாடுவது சிறப்பானது .

வேல் வழிபாடு

வேலை வணங்குவதே என் வேலை என வீட்டில் வேல் வைத்து வழிபடுவது நல்லது. வீட்டு பூஜை அறையில் வேல் வைத்து அதன் இருபுறமும் விளக்குகல் வைத்து ஒவ்வொன்றிலும் மூன்று திரிகள் என ஆறு தீபங்கள் ஏற்றி ,வழிபட்டு வருவதால் நம் வாழ்வில் சீரும் ,சிறப்பும் மங்கலங்களும், உயர்வும் ,புகழும் ,ஏற்படும்
பல நன்மைகள் நம்மை வந்து சேரும்.

கார்த்திகேயன் அன்னதான பிரபு என்பதால் இந்த விரதம் மேற்கொள்ளும் போது .உங்களால் முடிந்த அளவு ஏழை எளியவர்க்கு அன்னதானம் செய்வது மிகவும் சிறப்பான பலன் தரும் .

விசேஷமான நட்சத்திரங்கள்

முருகனுக்கு உகந்த நட்சத்திரமான கிருத்திகை விசாகம் .
அதேபோல சஷ்டி திதியும் மிகவும் விசேஷமானது இந்த மூன்றும் செவ்வாய்க்கிழமைகளில் வரும் பொழுது நாம் விரதம் மேற்கொண்டால் அந்த விரத்திற்கு பலம் அதிகம் .

திருமணத்தடைகள் நீங்க இந்த செவ்வாய்க்கிழமை விரதம் பெரிதும் கைகொடுக்கும். செவ்வாய் தோஷம் நீங்கவும் இந்த விரதத்தை மேற்கொள்ளலாம். சென்னையில் உள்ள வடபழனி கோவிலில் முருகப்பெருமான் கர்ப்பகிரகத்தின் முன்பில் செவ்வாய் பகவானுக்கும் அதனையடுத்து அன்னை மீனாட்சிக்கு சன்னிதானம் அமைந்துள்ளது குறிப்பிடப்பட வேண்டியது .

இவ்வாறு செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து நாம் முருகப்பெருமானை வழிபட்டால் வாழ்வில் இருக்கும் தடைகள் நீங்கி சகல வளங்களும் பெற்று வாழ அந்த முருகனின் அருள் கிட்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *