தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி கோவில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் ஜூன் 1-ந் தேதி கோவில்கள் திறப்பு பக்தர்கள் மகிழ்ச்சி

தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொரோனா வைரஸ் காரணமாக மார்ச் 25ஆம் தேதி முதல் நாடு முழுவதும் முடக்கப்பட்டு மாநில ,மாவட்ட அனைத்து எல்லைகளும் மூடப்பட்டு போக்குவரத்து ரத்து செய்யப்பட்டது .தொழிற்சாலைகள் கல்வி நிலையங்களும், மூடப்பட்டது அனைத்து கோவிலும் மூடப்பட்டு பக்தர்களின் தரிசனத்திற்கும் தடை பிறப்பிக்கபட்டது.அனைத்து மத வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆகம விதிப்படி கோவில்களில் தினசரி பூஜைகள் மட்டும் நடைபெற்று வந்தது .பக்தர்களின் தரிசனத்திற்கு அனுமதி மட்டும் அளிக்கப்படவில்லை.

நான்காம் கட்ட ஊரடங்கு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது .
சில பகுதிகளில் ஊரடங்கில் சில தளர்வுகளையை மத்திய அரசும் ,மாநில அரசுகளும் அறிவித்துள்ளது. ஆனால் இன்னும் பள்ளிகள் ,கல்லூரிகள், கோவில்கள் ,
மத வழிபாட்டுத் தலங்கள் திறப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை .எனினும் போக்குவரத்து தொழிற்சாலைகள் இயக்கம் போன்றவை கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மட்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமூக இடைவெளி கடைபிடிக்கப்பட்டு மத வழிபாட்டுத் தலங்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது .அந்த வழக்கு விசாரணையின்போது மத்திய அரசு மத வழிபாட்டுத் தலங்களை தரிசனத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என உத்தரவிட்டு உள்ளதாக தமிழக அரசு பதிலளித்தது .இதனை ஏற்று அந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது .


அதேசமயம் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை ஜூன் 1-ந் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு திறப்பது தொடர்பாக அறநிலையத்துறை ஆணையர் தலைமையில் உயர் அதிகாரிகள் குழு ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில் மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய கோவில்களில் ஆன்லைன் மூலம் பாஸ் வழங்கி ,நாளொன்றுக்கு 500 பேர் மட்டும் குறிப்பிட்ட நேரத்தில் சமூக விலைகளை கடைபிடித்து கோவில்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கலாம் என தீர்மானம் செய்யப்பட்டு அதை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்து இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் வருகிற ஜூன் மாதம் 1-ந் தேதி முதல் கோவில்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது .
அதன்படி அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 40,000 கோவில்களில் சமூக விலகலை கடைபிடித்து கட்டுப்பாடுகளுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது .

பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அனைத்து கோவில் நிர்வாகமும் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்றும், பக்தர்கள் சமூக இடைவெளியை கடைபிடிப்பது மட்டுமின்றி அனைவரும் முக கவசம் அணிந்து வருவது உறுதி செய்யப்பட வேண்டும்.இது போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *