நவீன தரவு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சிறுசேரி சிப்காட்டில் ரூபாய் 500 கோடி மதிப்பில் அமைய உள்ள நவீன தரவு மையத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார்

மத்திய அரசின் நேஷனல் பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தின் மூலம் ரூபாய் 500 கோடி மதிப்பில் சிறுசேரி சிப்காட் தகவல் தொழில்நுட்ப பூங்காவில் நவீன தரவு மையம் அமைக்கப்படவுள்ளது.டிஜிட்டல் இந்தியா எண்ணத்தை செயல்முறை படுத்தும் விதமாக பல்வேறு நவீன டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தரவுகள் இங்கு சேகரிக்கப்படவுள்ளது.

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொலி காட்சி மூலம் அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர்
ஓ.பன்னீர்செல்வம் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ஆர் பி உதயகுமார் தலைமைச் செயலாளர் சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *