பாம்பு கடிப்பது யானை மிதிப்பது போன்ற கனவுகள் கண்டால் என்ன பலன் தெரியுமா

பாம்பு கடிப்பது யானை மிதிப்பது போன்ற கனவுகள் கண்டால் என்ன பலன் தெரியுமா ?

சென்னை-வாழ்க்கையில் முன்னேற கனவு காணுங்கள் என்றார் அப்துல் கலாம். ஜோதிடத்திற்கும் கனவுக்கும் மிக நெருங்கிய தொடர்பு உள்ளது நமக்கு நடக்கப்போகும் நல்ல கெட்ட செயல்களை கனவுகள் நமக்கு உணர்த்தும்.

பகல் கனவு பலிக்காது என்றும். அதே நேரத்தில் சிலருக்கு ஆழ்ந்த உறக்கத்தில் காணும் கனவும், அதிகாலையில் காணும் கனவும் பலிக்கும் என்றும் கூறுவர்.

எல்லா கனவுக்கும் தனி பலன் உண்டு குறிப்பாக வீடு எரிவது, தானியத்தை சேமிப்பது போல கனவு கண்டால் செல்வம் சேரும் .அதே போல மாமரம் ,புளியமரம், பாக்குமரம் ,தென்னை மரம் ,இவற்றில் காய்கள் நிறைந்திருப்பது போல கனவு கண்டால் செல்வம் சேர்ந்து வாழ்க்கையில் உயர்வு ஏற்படும்.
வெள்ளை பட்டு அணிந்த அழகான பெண்ணை கண்டால் செல்வம் சேரும். பெண் கையில் தாமரைப் பூ ஏந்தி வருவது போல கனவு கண்டாலும் செல்வ நிலை உயரும் .அருவருப்பான மனிதர்கள் ,காகம், இரத்தம், மீன் ,இவற்றை கனவில் கண்டால் செல்வம் சேரும்.
வீடு கட்டுவது, மரம் நடுவது

அதேபோல மலர்களில் ,தாமரை ,வெள்ளை பூ மாலை, மற்றும் தங்கம் இவைகளை பெறுவதாக கண்டால் பெரும் புகழ் பெறுவர் .

மிருகங்களில் பசு ,குதிரை, சேவல் ,போன்ற மிருகங்கள் கனவில் வருவதால் செல்வங்கள் சேரும் அதிர்ஷ்டம் ஏற்படும் .

கோவில் கோபுரம் ,சிலையை கனவில் கண்டால் ஆயுள் விருத்தியாகும் .குதிரையை கனவில் கண்டால் வெற்றி கிடைக்கும் ,குதிரையின் மீது ஏறி சவாரி செய்வது போல கனவு வந்தால் வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். யானை கனவில் வந்தால் செல்வம் வரப்போகிறது என்று அர்த்தம். யானை மீதேறி சவாரி செய்வது போல் கனவு கண்டால் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.

கனவில் பாம்பைக் கண்டால் அதிர்ஷ்டம் வரும், அதேபோல் பாம்பு கடித்து இரத்தம் வருவதாக, நாய் கடித்து இரத்தம் வருவதாக கனவு கண்டால் நம்மை பிடித்திருந்த பீடைகள் அகன்று போகும்.

பணம்,சாதம் ,வெற்றிலை ,மாம்பழம் ,பாக்கு, தானியம், இவைகளை பெறுவதாகவும் ,
சாதத்தை உண்பதாகவோ .கோவிலில் பால் அபிஷேகம் செய்யப்படுவதை கனவில் கண்டாலோ வியாபாரத்தில் லாபம் கிடைக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *