பெங்களூரை உலுக்கிய மகா சத்தம். திடீரென கேட்ட பயங்கர சப்தத்தால் பெங்களூரு மக்கள் நடுங்கி போயுள்ளனர்

பெங்களூரை உலுக்கிய மகா சத்தம்- பூகம்பம் இல்லை ;விமானம் பறக்கவில்லை இதன பரபரப்பு பின்னணி என்ன?

பெங்களூர்- பெங்களூர் நகர மக்களை பீதிக்குள்ளாக்கி உள்ளது ஒரு மகா சப்தம்.
புதன்கிழமை அன்று மதியம் வெளியான அந்தப் பேரிரைச்சல் நகர மக்களை
அச்சத்தில் உறைய வைத்துள்ளது .இந்த சப்தம் ஏன் எழுந்தது என்பது பற்றி பல்வேறு தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

புதன்கிழமை மதியம் சுமார் 1 மணி 20 நிமிட அளவுக்கு டமால் என்ற ஒரு மகா சத்தம் பெங்களூரில் வெளிப்பட்டது .ஒரே பகுதியில் மட்டும் இந்த ஒலி கேட்கவில்லை ஒரே நேரத்தில் பெங்களூரை சேர்ந்த பல்வேறு பகுதிகளிலும் இந்த ஒளி உணரப்பட்டுள்ளது .கிழக்கு பெங்களூர் பகுதியான கே ஆர் புரம் முதல் இந்திரா நகர் ,ஒயிட்பீல்டு, பன்னேருகட்டா சாலை, கோரமங்களா ,பொம்மனஹள்ளி, எலக்ட்ரானிக் சிட்டி ,பேகூர் ,என்று சம்பந்தமே இல்லாத தொலைதூர பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த சத்தத்தை உணர்ந்துள்ளனர்.
அதுவும் குறிப்பாக கே ஆர் புரம் பகுதியில் தான் இந்த ஒளியின் அளவு மிக அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது .


இதைத்தொடர்ந்து பத்திரிக்கையாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்வை உடனடியாக தொடர்பு கொண்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து வருவதாகவும்
விரைவில் பதில் அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார் .
எப்படி இருந்தது இந்த சத்தம்
மக்களிடம் இந்த சத்தத்தை குறித்து கேட்ட போது ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் வெடித்தால் எப்படி சத்தம் வருமோ அது போன்று அந்த சத்தம் இருந்தது என்கிறார்கள்.
இதற்கு முன்பு இதுபோன்ற ஒரு சத்தத்தை கேட்டதே இல்லை என்று நடுக்கத்தோடு தெரிவிக்கிறார்கள் இந்த சப்தம் மிகவும் வித்தியாசமாகவும் பேரிரைச்சலோடு இருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கிறார்கள் .வாழ்க்கையிலேயே இப்படி ஒரு சட்டத்தை கேட்டதில்லை என்கிறார்கள்.
பெங்களூரில் உள்ள மக்கள் தங்களுக்குள் வாட்ஸ்அப் குரூப்பில் இதுகுறித்து தான் பீதியோடு பேசிவருகிறார்கள் . பலரும் வீட்டை விட்டு வெளியே ஓடி வந்து பார்த்ததாகவும் வெடிகுண்டு வெடித்தது போல சப்தம் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
பிரகாஷ் என்ற பெங்களூர் வாசி வளைகுடாவில் அமெரிக்கா குண்டு வீசிய போது இதுபோன்ற சத்தத்தை தான் கேட்டதாக ஒரு தொலைக்காட்சி சேனலில் நடுக்கத்தோடு தெரிவித்துள்ளார். சிலரோ வீட்டில் இருந்த கண்ணாடி உடைந்ததாகவும் தெரிவிக்கிறார்கள் .
இதுகுறித்து விமானப்படை இடமும் நகரகாவல்துறை தொடர்பு கொண்டு விளக்கம் கேட்டுள்ளது
இது சோனிக் பூம் சப்தமாக இருக்குமோ என்ற கோணத்தில் விசாரித்தனார்.

சொனிக் போம் – 

இதனிடையே மிராஜ் போன்ற போர் விமானங்கள் பறந்தால் ஏற்பட்ட சத்தமாக இருக்கக் கூடும் என்ற சந்தேகம் எழுந்தது இதை சொனிக்போம் என்று சொல்லுவார்கள் ஒளியின் வேகத்தை விட ஒரு பொருள் காற்றில் மிக வேகமாக ஓடக்கூடிய ஒளி என்று அழைக்கப்படும் .சொனிக் போம் பயங்கர ஒளி ஆற்றலை உருவாக்கும் இந்த சப்தம் இடியின் சத்தத்தை போன்று ஒலியை ஏற்படுத்தும்.எனவே இந்த சத்தத்தின் அடிப்படையில் பெங்களூருவில் உள்ள அமைப்பை நிருபர்கள் தொடர்பு கொண்டு கேட்டனர் ஆனால் அவர்கள் எந்தவிதமான விமானமும் இன்று இயங்கவில்லை என்று தெரிவித்தனர்

அதேபோன்று பேரிடர் மேலாண்மை அமைப்பின் அதிகாரிகளை தொடர்பு கொண்டு கேட்ட பொழுது பெங்களூருவில் பூகம்பம் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த சத்தத்திற்கும் பூகம்பத்திற்கும் தொடர்பு இல்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் சிலர் இது பற்றி கூறுகையில் ஆம்பன் புயல் மேற்கு வங்க கடலில் இருந்து வடக்கு நோக்கி நகர்ந்தபடி இருக்கிறது மேற்கு வங்கத்தை அதை நெருங்கி விட்டது எனவே பெங்களூரு உள்ளிட்ட தென்னிந்திய நிலப்பரப்பின் மேல் உள்ள வளிமண்டலத்தில் ஒரு வெற்றிடம் உருவாகி உள்ளது. இந்த வெற்றிடத்தின் காரணமாக வளி மண்டலத்தில் வெடிப்பு ஏற்பட்டு இது போன்ற சத்தமாக எதிரொலித்து இருக்கும். எனவே மக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் தெரிவித்துயிருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *