விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதில் தமிழகத்திற்கு இன்னும் சந்தேகம் உள்ளதா காரணம் என்ன?
விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதில் தமிழகத்திற்கு இன்னும் சந்தேகம் உள்ளதா காரணம் என்ன?
இந்தியாவில் உள்ள அனைத்து உள்நாட்டு விமானங்களும் மே 25 முதல் மீண்டும் தொடங்க இருப்பதாக சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவித்துள்ள நிலையில் தமிழக மாநில அரசு மீண்டும் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவதை மே 31 வரை நிறுத்தி வைத்துள்ளது.
வைரஸ் பரவுவதைபற்றி கவலைப்படுவதை தவிர மாநில அரசு வேறு சில விஷயங்களை கவனத்தில் எடுத்துள்ளது. மாநிலத்தில் ஏராளமான பொது போக்குவரத்து இல்லை என்பதால்இது பயணிகளுக்கு மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கலாம் என்று என்டிடிவி யுடன் பேசியபோது ஒரு மூத்த அதிகாரி கூறியுள்ளதாவது, நாங்கள் இன்னும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திடம் கேட்கவில்லை என்று கூறியுள்ளார்
சென்னை விமான நிலையத்தை தவிர மற்ற விமான நிலையங்களையும் திறக்க மாநில அரசு ஊகித்து வருகிறது .
இருப்பினும் சென்னை விமான நிலையம் மக்களின் போக்குவரத்தை எலிதாக்குவதற்கான பிற தேவைகளையும் கைகொண்டுள்ளது. குறுகிய விமான போக்குவரத்து பிறகு தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஹர்தீப் பூரி அறிவித்த போதிலும் தமிழகத்திற்கு வரும் மக்களை தனிமைப்படுத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.