200 ரயில்களின் கால அட்டவணை வெளியீடு-ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டம்

200 ரயில்களின் கால அட்டவணை வெளியீடு-ஜூன் 1 முதல் சிறப்பு ரயில்கள் இயக்கத் திட்டம்

டெல்லி -நாடு முழுவதும் ஜூன் 1-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு நாளை காலை தொடங்குகிறது.ஜூன் 1-ந் தேதி முதல் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான கால அட்டவணையும் வெளியிடப்பட்டுள்ளது .
கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது முதல் ரயில் போக்குவரத்து முழுமையாக துண்டிக்கப்பட்டது.ஆனால் மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்வதற்காக சரக்கு ரயில்கள் மட்டும் இயக்கப்பட்டன.இதனை அடுத்து ஊரடங்கில் சில கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில் மே 1-ந் தேதி முதல் இடம்பெயர் தொழிலாளர்களுக்காக
சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இதுவரை சுமார் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் .இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் 200 பயணிகள் ரயில் இயக்கப்படும் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேற்று அறிவித்திருந்தார் .
அதற்காக இந்த 200 ரயில்களுக்கான ஆன்லைன் முன்பதிவு வியாழக்கிழமை காலை தொடங்குகிறது. அனைத்து பயணிகளும் இ-டிக்கெட் மூலம் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார் எனவும் ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.அத்துடன்
ரயில்வே முன்பதிவு மற்றும் ரயிலில் பயணம் செய்யும் போது கடைபிடிக்கப்பட வேண்டிய விஷயங்கள் உள்ளிட்டவை தொடர்பான அறிவுறுத்தல்களையும் ரயில்வே அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *