48,940 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை. வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுகிறது

தங்கம் வாங்க ஆள் இல்லை ஆனால் எப்படி விலை ஏறுகிறது 48,940 ரூபாயைத் தொட்ட தங்கம் விலை.

காசு, பணம் ,சொத்து ,நகை ,செல்வாக்கு பொருளாதாரம், அந்தஸ்து ,என மனிதர்கள் நினைக்க தொடங்கியதில் இருந்தே மக்களின் மத்தியில் தங்கம் அதிகம் பிரபலமாக தொடங்கிவிட்டது
அவர்களின் மனதில் தங்கம் வாங்கும் எண்ணம் அதிகரித்து விட்டது.

தங்க நகை என்பது நம் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது
‘ஆள் பாதி ஆடை பாதி’ என்ற பழமொழி போய் ‘ஆள் பாதி தங்கம் பாதி’ என்றாகிவிட்டது.

இப்பொழுது தங்கம் என்பது ஒரு சொத்தாக கண்ணில்படுகிறது யாரிடம் எவ்வளவு சவரன் நகை உள்ளது.ஒரு பெண் எத்தனை சவரன் நகை அணிந்து வருகிறாள் என்பதே மதிப்பாக போயுள்ளது.

இப்பொழுது தங்கம் விலை நிலவரம் என்ன தெரியுமா.நம் சிங்காரச் சென்னையில் 24 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,940 என்கிற வரலாற்று உச்சத்தை தொட்டு இருக்கிறது .22 கேரட் 10 கிராம் ஆபரண தங்கத்தின் விலை 45,870 ரூபாயை தொட்டி இருக்கிறது.
பவனுக்கு
24 கேரட் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 39,152 ரூபாயை தொட்டு இருக்கிறது .22 கேரட் ஒரு பவுன் ஆபரண தங்கத்தின் விலை 36,696 ரூபாயைத் எட்டி இருக்கிறது .கடந்த 2019 ஜனவரி முதல் தங்கம் விலை இப்படி மேல் முகம் நோக்கியே ஏறிக் கொண்டிருக்கிறது.

தற்போதைய கேள்வி
கோரோனா என்ற வைரசால் உலகமே முடங்கி இருக்கும் நிலையில் யார் தங்கத்தை வாங்குகிறார்கள்..? எப்படி விலை அதிகரிக்கிறது..? விலை அதிகரிப்பதற்கான காரணங்கள் என்ன..? என எல்லோருடைய மனதிலும் கேள்வி எழுகிறது.

அதற்கான விடைதான்

இந்த இரண்டு முக்கிய காரணங்கள்
1.உலகப் பொருளாதார காரணிகள் +
சர்வதேச தங்கம் விலை
2.அமொிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு

உலகப் பொருளாதாரத்தில் ஏற்றம் இறக்கம் வருகிறபோதெல்லாம் தங்கத்தின் விலை கண்ணை மூடிக்கொண்டு ஏற தொடங்கிவிடுகிறது அதற்கு கோரோனா மிகச்சிறந்த உதாரணம்.கோரோனா பயத்தால் சர்வதேச பொருளாதாரத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.அதுவும் தங்கத்தின் விலை ஏறுவதற்கு ஒரு காரணமாக இருக்கிறது.

பணம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை தங்கத்தில் கொண்டுவந்து முதலீடு செய்கிறார்கள.சந்தையில் எந்தப் பொருளுக்கு டிமாண்ட் கூடுகிறதோ அந்தப் பொருளுக்கு விலை ஏற தான் செய்யும். நாளுக்கு நாள் தங்கத்தின் விலை இப்படி ஏறி கொண்டே போனால் ஏழை மக்களின் மனதிலும் வாழ்விலும் தங்கம் என்பது ஒரு கனவாகவே மாறிவிடும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *